Tamil
நல்வரவு
TED இன் திறந்த மொழிபெயர்ப்பு செயற்றிட்டத்தின் விக்கி தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம். ஆக்கபூர்வமான கருத்துக்கள், யோசனைகள் என்பன மொழிகள் கடந்து அனைவரையும் சென்று சேரவேண்டுமென்ற நோக்கில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
நோக்கம்
இந்த விக்கியின் பிரதான நோக்கமாக, தமிழில் TED பேச்சுக்களை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களிடையே கருத்துக்களை பரிமாறுவதோடு, மொழிபெயர்ப்பாளர் சமூகத்தின் அரிய பல உத்திகள், கருவிகள் மற்றும் யோசனைகளை பகிர்ந்து கொள்வதுமாகும். பொதுவாக TED பேச்சுகளில் காணப்படுகின்ற கலைச்சொற்களுக்கான தமிழ்ப்பதத்தை சரியாக இனங்கண்டு பயன்படுத்துவது அவசியமானதாகும். இதனடிப்படையில், அது தொடர்பான கலந்துரையாடல்களை இந்த விக்கியில் செய்து, முடிவுகளை எடுக்கின்ற போது, அது பற்றிய குறிப்புகள் பிரிதொரு நிலையில் முடிவுகளை எடுப்பதற்கான இலகுவான வழியை உருவாக்குமென்பது திண்ணம்.